''அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்கு உண்மையான ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது" - கோயிலின் தலைமை அர்ச்சகர்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு உண்மையான ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாகவும், அது அவருடைய அர்ப்பணிப்புக்கான வெகுமதி என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனக்கு அழைப்பிதழ் தேவையில்லை என்றும், தான் விரும்பும்போதெல்லாம் அயோத்தி ராமரைத் தரிசிப்பேன் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Comments